Friday, July 2, 2010

thunai

துணை
ஆற்றுக்கும் பாதைக்கும் நடுவில்
சாலையோரம் நடப்பாய் நீ
பாதைக்கும்  உனக்கும் நடுவே
நான்
உனக்கும் ஆற்றுக்கும் நடுவேதான்
என் நினைவு

அறிவு கொள்
ஆற்றல் வளர்... தந்தை!
அன்பு கொள்
ஆண்மை வளர்... அன்னை!
என்னை கொள்
உன்னை கொல்... நீ

தனித்தனி உயிர் நமக்கு
என்னுயிர் எனக்குள்
உன்னுயிர் உனக்குள்
என்னுயிருள்ளும்
உன்னுயிருள்ளும்
என்னையும் உன்னையும்
உண் உயிர் நம் உயிர்

நான் அறியா ஆழங்கள்
உன் மனதிலும் உண்டு
நீ அறியா ஆளுகைகள்
உன் கண்ணிலும் உண்டு

காதல் தோல்வியில்
தாடி வளர்க்கமுடியாமல்
தீரம் வளர்ப்பீர்களோ?
எது எவ்வகையா
உன் பழைய அவனக்கு
இஜ்ஜென்மம் முழுதும்
கடன் பட்டவனானேன்

சிறு வயதில்
சின்னப் பொட்டு நிலா
அறிவியல் தயவில்
வெள்ளைக் கல் நிலா
இப்போழுதிலோ
என் மனம் சுற்றும்
என் மனம்  முற்றும்!

உன் சிரிப்போசை
அவ்வப்போது குமுறும்
எரிமலைகள்
என்னை எரிக்காமல்
அணைவதில்லை

உன் கருவிழியோ 
கரையோரம் அலையாடினாலும்
உள்ளே அலைபாயா
கடல் தன்மை
எனக்கு மட்டும் வாய்த்த
அமைதிப் பூங்கா

உன் வளையோசை
மரங்களின் அசைவோசை
தூரமாய் வரும் தென்றல் கண்டு
கண்டிப்பாய் தழுவல் உண்டு

உன் மொழியோ
கவிதையூடே வரும்
கதை போலே
பக்கம் பக்கமாய் பிடிப்பு
எக்கச்சக்கமாய் களிப்பு

உன் தீண்டல்
என் வாழ்வின் நீட்டல்
உன் தூண்டல்
என் காதலின் மீட்டல்
தர்க்கம்... சொர்க்கம்...
தாகம்... என் மோகம்...

அழகுகளோடு ஒப்பிட்டால்
உனக்குத்தான் அசிங்கம்...
இத்தோடு முடிக்கிறேன்
என் களங்க கவிதை கட்டுகளை
இப்படியாய்
மொத்தமாய் நீ
சுத்தமாய் நான்

என்னின்  எதுகை
உன் எண்ணச் சலுகை
என் வாழ்வின் மோனை
என்றும் உன் துணை
கண்ணன்


No comments:

Post a Comment