கண்மொழி
உன் குழைந்த பார்வையில்நான் குவிந்து குறைந்தேன்
என் விரல்கள் உன் விரல்களை
ஊடுருவதன் திறமையை ஆச்சர்ய்க்கும் நீ
உன் கண்கள் என்னையே
ஊடுருவுவதை ஏன் அறிவதில்லை
அன்போடு ஒரு சொல்
அடிமையாகிவிடுகிறேன்
அதையே கண்ணால் சொல்
காணாமல் போகிறேன்
வாய்க்கு எட்டிய வார்த்தை
கண்ணுக்கு எட்டுவதில்தான்
இங்கு இம்சை
அதுவே என் உயிரிசையும்!
சில்லென்ற பார்வையிலிருந்து
சில்மிஷ பார்வை வரை
சிலாகிக்கும் வித்தையை
எங்கு கற்றன கண்கள்
ஒன்றுமில்லையென நீ உரைத்தாலும்
உண்டு உண்டென்று உளரும்
ஒன்றாய் நாம் கலந்திருக்கையில்
உள்ளே என்னுள்ளே உலவும்
பார்வைக்காய் ஏங்கியது போய்
பார்வையால் ஏங்குகிறேன்
அடுத்தெப்போது கிட்டுமோ என
அவ்வப்போதே ஏந்துகிறேன்
அதிகம் அழுவதில்லை நீ
அதனால்தான் உயிரோடிருக்கிறேன்
நீயழும் கணங்களில் மட்டும்
அதிகமாய் கனக்கிறது மனம்
நீயில்லா தருணங்களில்
வாழ்வோடு தர்க்கம்
உன் விழிகளில் மட்டுமே பார்க்கிறேன்
என் வாழ்வியல் அர்த்தம்
கண்ணன்

No comments:
Post a Comment