விடிவெள்ளி
நீ எனக்கு தோழியா...
சந்தேகம் எனக்கு
பைத்தியிமாகி உனைத் தேடுகையில்
உள்ளத்தில் இருந்து கொண்டே
உணர்வுகளுக்கு கண்ணாமூச்சி காண்பிக்கையில்
அவசர அவசரமாய் நான் ஓட
உயிரை இழுத்து
அழுத்தி அமர வைத்து
அமைதி கொடுக்கையில்
அழகாய் யாரும் கவிதை கேட்டால்
உன் முகம் மனகண்ணை
எட்டி பார்க்கையில்
இக்கவிதை படிக்கையில்
உனக்குள் முட்டிப் பார்க்கும்
உணர்வுகளை நினைக்கையில்
நட்பா? காதலா?
நட்பிற்காய் நீ வாதம் செய்கையில்
நான் தோற்பதன் காரணம்
நட்பா? காதலா?
என வாதம் செய்ய நினைக்கும் பொழுதுகளில்
என சிற்சில சமயங்களில்
மட்டும் தோன்றும்
நீ எனக்கு தோழியா...
நான் தொலைந்துவிட்டதாய்
தோன்றும் போதெல்லாம்
உன்னில்தான் தேடச் சொல்லும்
என் இதயம்...
இப்போது இதயம்
தொலைந்துவிட்டதாய் எண்ணுகிறேன்
இதையும் உன்னில் தேடுவதோ...
காதலர் தினத்தன்று
நண்பர்களை
கேலி செய்த என்னை
நண்பர்கள் தினத்தன்று
கேலி செய்தது காதல்...
காதலின் காதுக்குள்
தோழி நீயென கத்தினேன்...
ஆனால் அதுவரை
கண்மூடியிருந்த காதல்
கண்மூடித்தனமாய் தாக்க
என் எண்ணங்கள்
குழம்பி போயின
உன் எண்ணம் வேண்டாமென
என் உள்ளம் உதறும்...
மனக்கிண்ணம் தாண்டேன் என
குழப்பச் சாறு கதறும்...
பட்டதும் சுட்டதும்
போதும் போதும் என்று
என் மனம்
வண்ண நினைவுகளை கிழித்துவிட்டு
காவிக்கு தாவி
அதோ ஓடிக்கொண்டிருக்கிறது...
தவம் செய்ய துணையாய்
மாலை ஒன்று
அதில் உன் நினைவுகளை
கோர்த்து சேர்த்துவைக்கும் கேள்விகள்
வேறென்ன...
நீ எனக்கு தோழியா...
கண்ணன்
