மனம்
அப்பா அம்மாவைபெல்டில் விளாசினார்
சிறு பையனாய்
நான் ஒரு மூலையில்
என் மனக்கதவை
திறந்த நொடியில்
கண்ணில் அறையப்பட்ட
முதல் நினைவு
முகம் மூடி
முன்னேறினேன்
நானும் என் தம்பியும்
ஒரு பட்டாம்பூச்சி பிடித்து
தீப்பெட்டி ஒன்றில்
அடைத்து வைத்தோம்
தவறென ஏன் தோன்றவில்லை
தடம் மாற்றினேன்
ஆசை வைத்த
வசந்தியிடம் கடிதம் கொடுத்து
அவள் அப்பாவிடம்
போட்டு கொடுக்க
பேப்பர் ரோஸ்ட் ஆகிக் கொண்டிருந்தேன்
ஒரு நினைவில்
மஞ்சள் பையும்
பேட்டா செருப்புமாய்
கல்லூரி சேர்ந்தேன்
மறு நினைவில்
பின்
பேனா கிறுக்கல்கள்
காதல் கிறுக்குகள்
வேலையில் சேர்ந்தது
சேலையில் விழுந்தது
திருமணம்
மழலை
ஏணிகள்
ஏமாற்றங்கள்
பட்டாம்பூச்சியாய்
எக்கச்சக்க நினைவுகள்
எதிலும் ஒட்டாமல்
என் மனதின்
தொடுவானம் தொட
ஓடிக் கொண்டிருகிறேன்
எதைத் தேடி எதற்காய்
நான் அறியேன்!
கண்ணன்

No comments:
Post a Comment